திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பங்கேற்பு..
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், கட்சியில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்துள்ள நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது, வருகிற 20-ம் தேதி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வது, அடுத்த மாதம் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிகளவில் கலந்து கொள்வது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி, மல்லிகா சின்னசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பாஸ்கரன், பேரூர் கண்ணதாசன், விவேக், ஜி.ரமேஷ், பாஸ்கரன், ஏவூர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, ராஜமாணிக்கம், சேனை செல்வம், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், நடராஜன், பிரகாஷவேல், ஆமூர் ஜெயராமன், ஜெயம், ராம்மோகன், வெங்கடேசன், ஜெயக்குமார், அழகாபுரி செல்வராஜ், கடிகை ராஜகோபால், பேரூராட்சி செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், திருஞானம் பிள்ளை, ராஜாங்கம், ராஜேந்திரன், செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் நெடுமாறன், எஸ். வி. ஆர்.ரவிசங்கர், நடேசன், யோகநாதன், ஈஞ்சூர் ராமு, எஸ்.எம்.ஆர்.ராஜேந்திரன், வி.என். ஆர் .செல்வம், கந்தர், தொட்டியம் செல்வராஜ், அற்புதம், கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர்கள் மனோகர், மகேஷ், கலைமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு திருப்புகழ், சுரேஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.