தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால், ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதன் காரணமாக இருமுறை தமிழக ஆளுநரை விஜய் சந்தித்தும் அவர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. முழு பெரும்பான்மையுடன் வந்து சந்திக்குமாறு ஆளுநர் கூறினார்.
இதனால் விஜய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரினார். அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக கூறினர். அதனைத் தொடர்ந்து இன்று( மே 8) இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை தெரிவித்தனர். இதன்மூலம் விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநரை இன்று மாலை விஜய் மீண்டும் சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதங்களை வழங்கினார். பின்னர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை கிடைத்ததால் விஜய் நாளை( மே 9) காலை 11 மணியளவில் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Comments are closed.