திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் நாளை( 19.7.2023) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், 20.7.2023-ந் தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. அதன் விவரம் வருமாறு:-
மண்டலம்-1 மேலூர், பெரியார் நகர், திருவானை கோவில், அம்மா மண்டபம், தேவதானம், மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, சுந்தராஜநகர், காஜாமலை புதியது, மண்டலம்-3 அரியமங்கலம், உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை , செக்ஸன் ஆபிஸ், நாகம்மை வீதி, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்.ஐ. சி பகுதிகள், சுப்பிரமணிய நகர், தென்றல் நகர், இ. பி.காலனி, வி.என். நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே நகர், ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, அன்பு நகர், ரெங்கா நகர், மண்டலம்-5 மங்கலம் நகர், சிவாநகர், உறையூர், பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், ஆனந்தம் நகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறாது. மறுநாள் 21.07.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.