திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை, கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று ( 18.07.2023 ) தொடங்கியது. இந்த வர்த்தக பணிமனை தொடர்ந்து நாளையும் நடக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில், வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கு. சரவணன் , மண்டல இணை இயக்குநர் எஸ்தர் சீலா, வேளாண்மை துணை இயக்குனர் மீனாகுமாரி, தோட்டக்கலை இயக்குனர் விமலா, செயற்பொறியாளர் குமார கணேஷ், வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தொழில் நுட்ப கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும், திருச்சி விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ்பாபு , நபார்டு வங்கி டி.டி.எம். மோகன், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பணிமனை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறம்பட வழிநடத்த விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு, தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட, இடைத்தரகர்கள் செயல்பாட்டை முற்றிலுமாக குறைத்திட வழிவகை செய்யப்படுகிறது. இதில், திருச்சி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.