தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க (118 உறுப்பினர்கள்) யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 108 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழக வெற்றிக்கழக பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களது இரு உறுப்பினர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதமும் த.வெ.க. நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆதரவளித்தால் த.வெ.க. 118 உறுப்பினர்களுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments are closed.