Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் மீன் மற்றும் இறைச்சி அங்காடி ஏலத்திற்கு நீதிமன்றம் திடீர் தடை…!

திருச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் இறைச்சி கடை, மீன், கருவாட்டு கடை என தனித்தனியாக இயங்கி வந்தது. இந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததாலும், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும் பெரும் சிரமமாக இருந்தது.  எனவே, இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, ரூ.13 கோடி செலவில் புதிதாக மீன் மற்றும் இறைச்சி அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த அங்காடியில் மொத்தம் 148 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கீழ்த்தளத்தில் 74 கடைகளும், முதல் தளத்தில் 14 கடைகளும் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த  23- 07-2024 அன்று கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் 61 கடைகளுக்கு மட்டும் ஏலம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த ஏலத்தில் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இந்நிலையில் கடைகள் விரைவில் திறக்கப்படும் சூழ்நிலை இருந்த நிலையில் திடீரென்று திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த கனி என்ற வியாபாரி திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சி காந்தி மார்க்கெட் மீன் மற்றும் இறைச்சி அங்காடியில்  முறைப்படி ஏலம் நடத்தப்படவில்லை என்றும், சட்டவிரோதமாக நடைபெற்று இருப்பதால் அந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி பிரபு சங்கர், வழக்கில் முகாந்திரம் இருப்பதால் காந்தி மார்க்கெட் மீன் மற்றும் இறைச்சி அங்காடி கட்டிடத்தில் உள்ள கடைகளை ஏலம் எடுக்க கடந்த 23.7.2024  அன்று நடைபெற்ற ஏலத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், இந்த வழக்கின் விசாரணை வருகிற அக்டோபர் மாதம்  14 ந் தேதி  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் வக்கீல் ராஜேஷ் கண்ணா வாதிட்டார். மாநகராட்சி சார்பில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி கடைகள் ஏலம் விட்ட நிலையில் அதற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்