Rock Fort Times
Online News

திருச்சியில் கண்டெய்னர் லாரியில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள்: பார்சல் அலுவலக மேலாளர் உட்பட நான்கு பேர் கைது…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாநகராட்சிக்கு  உட்பட்ட ஓலையூரில்,  நல்லுசாமி என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் 4 கிலோ.500 கிராம் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே  பகுதியைச் சேர்ந்த,  போசங்கு,  கிருஷ்ணமூர்த்தி  ஆகியோரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது.  இதனயைடுத்து அவர்கள் மூவரையும்,  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷ் தலைமையிலான குழுவினர்  மேல் நடவடிக்கைக்காக  எடமலைப்பட்டிபுதூர்  காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,  பஞ்சப்பூர் பகுதியில் செயல்படும் ஒரு பிரபல பார்சல் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த  கண்டெய்னர் லாரியில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்து எடை போட்டு பார்த்த போது  190 கிலோ இருந்தது.  அதன் அடிப்படையில்  புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பார்சல் அலுவலக மேலாளர் கருணாநிதியும் கைது செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்