திருச்சி மாவட்டம் பெருகலூரில் இருந்து லால்குடி நோக்கி அரசு பஸ் ஒன்று சம்பவத்தன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் புதூர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரிக்ஷா (12) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பிரிக்ஷாவின் புத்தகம் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுக்க முயன்றபோது, பிரிக் ஷா தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை சக பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரிக் ஷா, சிகிச்சை பலனின்றி இன்று (02-07-2024) பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மட்டுமின்றி சக மாணவ- மாணவிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.