Rock Fort Times
Online News

திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் பாதை மாறிய ராட்சத லாரியால் போக்குவரத்து பாதிப்பு…

திருச்சி நம்பர்-1 டோல்கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு ராட்சத லாரி ஒன்று இன்று(01-02-2024) காலை 8 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

ஆனால், அந்த லாரி நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லாமல், திருச்சி- லால்குடி சாலையில் தவறுதலாக அதன் டிரைவர் ஓட்டிச் சென்றார். மாந்தோப்பு பகுதியில் சென்றபோது தவறான பாதையில் வந்ததை அறிந்து லாரியை திருப்ப முயன்றார்.
அப்போது குறுகிய சாலை என்பதால் லாரியை திருப்ப முடியாமல் டிரைவர் திணறினார். இதனால், திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பள்ளி- கல்லூரி மற்றும் பணிக்கு சென்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவித்தனர். மேலும் மாநகரிலிருந்து வந்த வாகனங்களும், துறையூர், சேலம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களும் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் காத்து நின்றன. இதனால், பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்த தகவலின்பேரில் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் திருப்ப முடியாமல் திணறிய லாரியை வாகனங்களை பின் செல்ல செய்து ஒரு ஒரு வழியாக திருப்பி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போக்குவரத்தை சீர் செய்தனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்