Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரச்சாரம்: மும்மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை…! 

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இன்று( ஏப்.19)திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு வருகை தந்த விஜய், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிறுத்தம், காமராஜர் நகர், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், பிற்பகல் 3 மணி முதல் தொகுதிக்குள் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இடையே ஏர்போர்ட் காமராஜர் நகர் அந்தோணியார் ஆலயம், கொட்டப்பட்டு பச்சநாச்சி அம்மன் கோவில் மற்றும் பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்