Rock Fort Times
Online News

திருச்சியில் குப்பை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!

திருச்சி மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை ஏற்றி செல்வதற்காக மாநகராட்சி சார்பில் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு திருவானைக்காவல் மேம்பாலத்தில் ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தின் முன்புறம் திடீரென்று தீ பிடித்தது. சிறு நேரத்தில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே அதிலிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் அலறியடித்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதுகுறித்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்