Rock Fort Times
Online News

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும்-நிர்மலா சீதாராமன்…!

2024-25-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று( 01-02-2024)காலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்போது, மின்னணு( எலக்ட்ரிக்) வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிப்படும். பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கான மின்னணு வாகனங்களுக்கான உற்பத்தி, பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும், உயிரி-சிதைவு உற்பத்திக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை வழங்க உயிரி உற்பத்தி மற்றும் உயிரி ஃபவுண்டரி திட்டம் தொடங்கப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சின்னச் சின்ன சுற்றுலா மையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படும். லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்