திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களம் காண்கிறார். இந்த தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று (ஏப்.19) விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இனிகோ இருதயராஜை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மீது திடீரென பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது பாட்டில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.