Rock Fort Times
Online News

திருவள்ளூர் பிரச்சாரத்தின் போது புதுமண தம்பதிக்கு வாழ்த்து கூறிய விஜய்…!

தமிழ்நாட்டில் வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சி இருப்பதால் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று(20-04-2026) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும், சென்னை வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக விஜய் தனது பனையூர் இல்லத்தில் இருந்து காரில் கிளம்பிய விஜய், பாதி வழியில் பிரசார வேனில் ஏறினார். வேனில் நின்றபடி இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி சென்றார். அப்போது தவெக தொண்டர்கள் விஜய்க்கு பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். திருவள்ளூருக்கு செல்லும் வழியில் புதிதாக திருமணமான ஜோடி ஒன்று விஜய்யை பார்க்க சாலையோரத்தில் காத்திருந்தது. இதனை கவனித்த விஜய், அந்த ஜோடியை தனது வேனில் ஏற்றி வாழ்த்து கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்