திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக 25-7-23 முதல் 27-7-23 வரை 3 நாட்களுக்கு புதுக்கோட்டையிலிருந்து தினசரி காலை 7-50 மணிக்கு புறப்படும் 06126/காரைக்குடி-திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் குமாரமங்கலம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், இந்த ரயில் குமாரமங்கலம்-திருச்சி சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, 3 நாட்களுக்கு திருச்சியிலிருந்து தினசரி மாலை 6-15 மணிக்கு புறப்படவேண்டிய 06125/திருச்சி-காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் திருச்சி சந்திப்பு- குமாரமங்கலம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்கண்ட 3 நாட்கள் மட்டும் குமாரமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 6-30 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.