திருச்சி,ஸ்ரீரங்கம் அடைய வளஞ்சான் வீதியைச் சேர்ந்தவர் எம் எஸ்.கேசவன் (வயது 65) தனது வீட்டை பூட்டிவிட்டு குடந்தை சென்றார்.பின்னர் சில தினங்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கேசவன் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.