திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை பிரியா நகரைச் சேர்ந்தவர் நவீன் பிரகாஷ். இவரது மனைவி பிரசவத்திற்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டி விட்டு மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அந்த சமயத்தில் அவரது வீட்டின் பின்புற பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகையை திருடிச் சென்றனர். இந்நிலையில் மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய நவீன் பிரகாஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.