விஜயின் நம்பிக்கைக்குரிய ஓட்டுநராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ராஜேந்திரன். இவரது மகனான சபரிநாதனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்தார் விஜய். அப்போது விஜயுடன் புகைப்படம் எடுக்கையில் கண்கலங்கிய சபரிநாதன், விஜயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அதனை உடனடியாக தடுத்து நிறுத்திய விஜய், கண்கலங்கி அழுத சபரிநாதனை கட்டி அணைத்து வாழ்த்து கூறினார். இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி பெருக்கான சூழலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதன் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

Comments are closed.