Rock Fort Times
Online News

புதுச்சேரியிலும் வெற்றிக் கணக்கை தொடங்கியது தவெக…!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் களம் கண்டது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் தமிழக வெற்றி கழகம் புதுச்சேரியிலும் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் தவெக 28 தொகுதிகளிலும் அக்கட்சி கூட்டணி அமைத்த நேயம் மக்கள் கழகம் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இதில் மணவெளி தொகுதியில் தவெக வேட்பாளர் ராமு 13822 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உருளையன்பேட்டையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு வெற்றி பெற்றார். பாஜகவில் அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமாரை ராஜினாமா செயயச் சொல்லி ஜான்குமாருக்கு அமைச்சர் பொறுப்பு கடந்த அரசில் தரப்பட்டது. இறுதியில் பாஜகவில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமாருக்கு வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து, கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்தத் தேர்தலில் திருபுவனையில் போட்டியிட்டார். தவெகவில் சாய் சரவணன் குமார் 9,740 வாக்குகள் பெற்று வென்றார். இதையடுத்து தவெக புதுச்சேரியில் 2 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான நேயன் மக்கள் கழகம் ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது. இதன்மூலம், புதுச்சேரியில் தவெக கூட்டணி 3 தொகுதிகளில் இதுவரை வென்றுள்ளது. முதல் தேர்தலில் தவெகவும், தவெக கூட்டணிக் கட்சியும் தனது வெற்றிக் கணக்கை புதுச்சேரியில் துவக்கியுள்ளது. புதுச்சேரியில் தவெக பல தொகுதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்