திருவானைக்காவல் அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 34). இவர் கடந்த 27-ந் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று ( 29.05.2023 ) ஸ்ரீரங்கம் பொன்னுரங்கபுரம் மணல் குவாரியில் தினேஷ்குமார் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் , இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்?, அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்று காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.