திருச்சி, வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பழக் கடைக்கு வந்த வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 31) என்பவர் சந்திரசேகரை மிரட்டி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி மற்றும் ஆயிரம் ரூபாய்,செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து சந்திரசேகர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திவாகரனை கைது செய்து அவரிடமிருந்து நகை, பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.