Rock Fort Times
Online News

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினா் தொடர் காத்திருப்பு போராட்டம்….

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று ( 26.09.2023 ) தொடங்கியது. அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த அதிமுக அரசும், தற்போதைய திமுக தலைமையிலான மாநில அரசும், கடந்த 8 ஆண்டு காலமாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல் இருப்பதை கண்டித்து நடைபெறும் இப்போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவப்படி வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிரதிமாதம் முதல் தேதியிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பயன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 கோட்டங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்திற்கு போராட்டக் குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிராஜுதீன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி விளக்க உரையாற்றினார். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் சண்முகம், பவுல்ராஜ், சிவக்குமார், சேகர், லோகநாதன், ராமதாஸ் உள்ளிட்ட கூட்டமைப்பு தலைவர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்