Rock Fort Times
Online News

மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு வழங்குவதில் எதேச்சதிகாரம்…(வீடியோ இணைப்பு)

ஊழியர்களின் உயிரோடு விளையாடுவதாக குற்றச்சாட்டு....

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலையில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கடந்த ஆண்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டது. அதில், நிறுவனங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த நிறுவனங்களுக்கு மின் இணைப்புகள் வழங்குவதற்கு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை பொறுத்தவரை மின்வாரியம் நேரடியாக மேற்கொள்ள வேண்டும் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நடைபெற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது மின்வாரிய பெண் அதிகாரியாக பணியாற்றும் தனலெட்சுமி என்பவர் அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார். அவர் மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தாலும் கூட, அவர் தனி அதிகாரத்தில் அதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு பணியாற்றி வருபவர்கள் யார் என்று சம்மந்தப்பட்ட பெண் அதிகாரியான தனலெட்சுமியிடம் கேட்டபோது, தன்னார்வலர்கள் தான் பணியாற்றி வருகின்றனர் என்றும், அதில் வேறு யாரும் இல்லை என்றும் கூறுகிறார்.

இதுமட்டுமின்றி பணியில் இருப்பவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் யார் பொறுப்பு என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கூறுகிறார். ஒரு அரசின் தொழிற்பூங்காவில் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு மின்வாரியம் தான் மின்சாரம் வழங்கிட வேண்டும். ஆனால் மின்வாரியத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி தனலெட்சுமி தனக்கான அதிகாரத்தை உயரதிகாரிகளின் துணையுடன் தன்னந்தனியாக செய்து வருவதால் ஏதேனும் பணியின் போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இதனால் அரசிற்கும் பெரிய இழப்பு ஏற்படும் நிலையில் தமிழக அரசும், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்