திருச்சியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் நன்றி...
தமிழக தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம், இந்திர தேச மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழக தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர் கே.என்.நேரு ஆணையின்படி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று ( 04.10.2023) நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சி உழவர் சந்தை அருகில் முழு உருவ சிலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் கூறியதாவது:-
நீண்ட காலமாக தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம் . சிலை அமைத்திட திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சிலை வடிவமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் அரசு அனுமதியுடன் சிலை நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.