Rock Fort Times
Online News

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கை…* அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் இன்று(மே 23) தமிழ்நாடு மாநில வாணிப கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார். இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள பார்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை
மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்