Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா – நாச்சியாா் திருக்கோலத்தில் நம்பெருமாள்..

  108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டக நிகழ்ச்சியுடன் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இன்று பகல் பத்து பத்தாம் திருநாள் நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் சௌரிக் கொண்டை அணிந்து சூர்ய சந்திர வில்லை, கலிங்கத்துராய், தலைக்காப்பு, வைர மாட்டல், தோடு, பங்குனி உத்திர பதக்கம், திருமாங்கல்யம், அடுக்கு பதக்கங்கள், பவள மாலை, 6 வட முத்துமாலை, நெல்லிக்காய் மாலை, வலது திருக்கையில் கோலக்கிளி, இடது திருக்கையில் வளை காப்பு, காடகம், தாயத்து தொங்கல், திருச்சுட்டிகள் அணிந்து வெண்பட்டு உடுத்தி திருவடியில் தண்டை, சதங்கை அணிந்து, பின் சேவையில் – புஜ கீர்த்தி, அரைச் சலங்கை, ஜடை நாகம், ராக்கொடி, ஏலக்காய் தாண்டா அணிந்து சேவை சாதிக்கிறார். நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை ஆஸ்தானமிருப்பார்.

மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதைக்கு பிறகு 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து, வருகின்றனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்