நடிகை கெளதமி, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனக்குச் சொந்தமான நிலத்தை பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவர் விற்பனை செய்து தருவதாக கூறி, மோசடி செய்து விட்டதாகவும். இதுகுறித்து கேட்டபோது,
தனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், அவரிடம் இருந்து தனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வேண்டும், நில அபகரிப்பில் ஈடுபட்ட அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் அழகப்பன் உட்பட அவரின் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமறைவாகினர். அவர்களை 3 தனிப்படையினர் தேடி வந்தனர். அவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க ‘லுக் அவுட்’ நோட்டீசும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அழகப்பன் அவரது மனைவி நாச்சியம்மாள் உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த 6 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களை கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 969
Comments are closed, but trackbacks and pingbacks are open.