ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற வாலிபருக்கு திடீரென பக்கவாதம்: “கோல்டன் ஹவர்” சில், உடனடி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீரங்கம் அரசு மருத்துவர்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சத்யநாராயணா (வயது 31 ) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரது வாய் கோணலானது . கை, கால்கள் செயலிழந்த நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். உடனே, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருட்செல்வன் மேற்பார்வையில் டாக்டர் சரவணன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவரது உடலில் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதேபோல பக்கவாதம் ஏற்பட்டவருக்கு Golden hours ஆன நான்கு மணி நேரத்தில் செலுத்த வேண்டிய “அல் டேப்லெஸ் ” என்ற ஊசி செலுத்தப்பட்டது. இதனால் 2 மணி நேரத்தில் அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்பியது. தனியார் மருத்துவமனையில் பல்லாயிரம் ரூபாய்க்கு செலுத்தப்படும் இந்த ஊசி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தக்க நேரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கு சத்ய நாராயணா மற்றும் அவரது நண்பர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed.