கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லாரியை மறித்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது அந்த லாரியில் 661 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதற்கு பின்புலமாக யார், யார் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய நபராக ராமதாஸ் என்கிற கருப்பப்பாண்டி செயல்பட்டதும், அவர் தலைமையிலான குழுவினர் 661 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபரான கருப்பப்பாண்டி பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.