விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால், அதில் சில காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் சென்சார் போர்டு படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கவில்லை. பின்னர், பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியும் இதுவரை எந்த பலனும் இல்லை. விஜயும் அரசியலில் பிஸியாகி விட்டார். இந்தநிலையில் ஜனநாயகன் திரைப்படம் திடீரென இணையதளத்தில் கசிந்தது. இதனை ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இணையதளத்தில் படம் ‘லீக் ‘ ஆனதால் தயாரிப்பு நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை ‘லீக்’ செய்தது அந்த படத்தை எடிட் செய்த எடிட்டர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்தநிலையில் அந்தப் படத்தின் படத்தொகுப்பாளர் சங்கத்திலிருந்து பிரதீப் ராகவ் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்க விதிகளை மதிக்காமல், சங்க உறுப்பினர் அல்லாதவர்களை அவர் பயன்படுத்தி உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் ராகவ் காரணமில்லை என்றாலும் அவரது கவனக்குறைவு காரணமாக அமைந்துள்ளது. இதனையடுத்து எடிட்டர் பிரதீப் ராகவ் படத்தொகுப்பாளர் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.