234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல, மேற்கு வங்க தேர்தலிலும் முதற்கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.