ஹெச்.பி.சி.எல். திருச்சி மண்டல அலுவலகம் சார்பில் மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
தமிழகம் முழுவதும் கடந்த 28-10-2024 முதல் 3-11-2024 -ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. அதேபோல, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) திருச்சி மண்டல அலுவலகம் சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் தெருக்கூத்து (தப்பாட்டம்) மற்றும் கரகாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் ஊழல் செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், அப்போது அவர்களது எண்கள் யாருக்கும் தெரியாது என்றும், ஒருவேளை பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் அவர்களது பொருளாதார வாழ்வுக்கு மத்திய அரசு காலம் முழுவதும் உதவும் என்றும் தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புற நடனத்தின் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு விழிப்புணர்வு வாரத்தின் “தேசத்தின் வளத்திற்கு நேர்மையின் கலாசாரம்” என்ற தலைப்புக்கு இணங்க, இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
Comments are closed.