எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் தலைவராக கண்ணையா இருந்து வருகிறார். துணை பொது செயலாளராக திருச்சியை சேர்ந்த வீரசேகரன் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் திருச்சி மண்டல ரயில்வேயில் பணியாற்றும் அறிவழகன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்ணையா, வீரசேகரன் குறித்து அவதூறாக பேசி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பி உள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரசேகரன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், திருச்சி கண்டோன் மென்ட் போலீசார் அறிவழகன், ரமேஷ் ஆகிய இருவர் மீது மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.