தமிழக சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் வெற்றி பெற்றதால் டெல்லி மேல்சபை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் ஒரு மேல் சபை எம்.பி. சீட் காலியாக உள்ளது. இதற்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் த.வெ.க. அறிவிக்கும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி, எனவே த.வெ.க. யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நிலையில் மேல்சபை உறுப்பினருக்கான இடம் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த எம்.பி. பதவியை காங்கிரசை சேர்ந்த ராகுலின் நண்பர் பிரவீன் சக்கர வர்த்திக்கு கிடைக்கும் என்று ராக்போர்ட் டைம்ஸ் சரியாக கணித்து செய்தி வெளியிட்டு இருந்தது எதிர்பார்த்தபடியே பிரவீன் சக்கரவர்த்தி இன்று( ஜூன் 4) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.