திருச்சி பாஸ்போர்ட் மற்றும் தலைமை தபால் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…* அங்குலம், அங்குலமாக சோதனை..!
திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்திற்கு இமெயில் மூலம் ஒரு கடிதம் வந்தது.அதில், இரண்டு அலுவலகங்களிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆகவே, இது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது. இருந்தாலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த மே 31ம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.