திருச்சி, ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் குமார். பிளம்பர். மேலும், ராமநாதபுரம் வகை ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது உறவினரான கணேசன் என்பவரும் இவ்வகை ஆடுகளை வளர்த்து வருகிறார். குமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில் கணேசன், கீதாபுரம் தடுப்பணை அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் சுமார் 1.30 மணி அளவில்குட்டி போடும் நிலையில் இருந்த சினை ஆடுகளை தோட்டத்திலிருந்து வீட்டுக்கு விரட்டி
விட்டு மற்ற ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். சினையாடுகள் அனைத்தும் அவர் வீட்டருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் வந்த மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ஆடுகளை காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். வீட்டிற்கு வந்த கணேசன், சினை ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் இருந்த சிசிடி காட்சிகளை பார்த்த போது வெள்ளை நிற காரில் வந்த மர்ம கும்பல் ஆடுகளை திருடி சென்றது உறுதியானது. இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் கடந்த மாதமும் நடைபெற்றது . ஆனால், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதியாமல் விட்டு விடுவதாக கூறப்படுகிறது.
இதனால், ஆடு, வளர்ப்போர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே, ஸ்ரீரங்கம் போலீசார் இதில் கவனம் செலுத்தி ஆடு திருடும் கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed.