திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக, இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் கோவிலில் திடீரென முகக்கவசம் அணிந்து ரகசிய ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களிடம் ஊழியர்களும், அர்ச்சகர்களும் லஞ்சம் கேட்டது மற்றும் முறைகேடாக பணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்ட நடவடிக்கையாக லஞ்சம் வாங்கியதாக ஒரு அர்ச்சகர் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, கோவிலின் நிர்வாக சீர்கேட்டின் அடிப்படையில் பொறுப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணை ஆணையர் உட்பட பலர் வேறு கோவில்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு;


Comments are closed.