திருச்சி, சோமரசம்பேட்டையில் சூசையப்பர் பர்னிச்சர் மார்ட் புதிய ஷோரூம் – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்…!
திருச்சி, வயலூர் ரோடு சோமரசம்பேட்டை உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் சூசையப்பர் பர்னிச்சர் மார்ட்டின் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று ( ஜன.19 ) நடைபெற்றது. ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை இதன் உரிமையாளர்களான ஏ.ஸ்டீபன் ஜெயராஜ் மற்றும் நான்சி ஸ்டீபன் ஜெயராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
இவ்விழாவில் திருச்சி மத்திய மாவட்ட திமுக பிரமுகர் துரை பாண்டியன், சோமரசம்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணவதி துரை பாண்டியன், சோமரசம்பேட்டை பேராலய பங்குத்தந்தை அருட்சகோதரர் எஸ்.அந்தோணி பால்ராஜ் மற்றும் அருட்சகோதரர்கள் எஸ்.சவரிமுத்து, ஐ.டேவிட் மோசஸ் மற்றும் வாடிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய ஷோரூமின் சிறப்பம்சங்கள் குறித்து நிர்வாக இயக்குனர் ஏ.ஸ்டீபன் ஜெயராஜ் கூறும்போது.,15 ஆண்டுகளுக்கும் மேலாக மர பர்னிச்சர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கட்டில், பீரோ, சோஃபா, டைனிங் டேபிள், மர ஊஞ்சல் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவகையில் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். திறப்பு விழா சலுகையாக வாங்கும் அனைத்து வகையான பர்னிச்சர்களுக்கும் 10 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார்.
Comments are closed.