திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு விமானப்படையில் சேரும் வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காளிதாஸ் (55) என்பவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தா புதுப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காளிதாஸ் தொண்டையில் மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காளிதாஸ் துப்பாக்கியால் எதற்காக சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.