அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை திருட்டு- சிசிடிவி மூலம் சிக்கிய திருடன்…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தில் காளிக்கோயில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாமி கும்பிடுவது போல நடித்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகைகளை திருடிக் கொண்டு நைசாக சென்று விட்டார்.
மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த நகையை காணாதது கண்டு கோவில் நிர்வாகத்தினர் திடுக்கிட்டனர்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த நகையை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த மருதைவீரன் மகன் சிவசுப்பிரமணியன் (38) என்பதும், தற்போது அவர் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனது மனைவி வீட்டில் தங்கியிருந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சிவசுப்பிரமணியன் கோவிலில் திருடும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.