மின் சேவையில் குறைபாடுகளை களையும் பொருட்டு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் கோட்ட அலுவலகங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முசிறி கோட்டத்தில் 05.07.2024 (வெள்ளிக்கிழமை), லால்குடி கோட்டத்தில் 9-ம் தேதி (செவ்வாய்க்கிழமை), ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை), திருச்சி நகரிய கோட்டத்தில் வருகிற 16-ம் தேதி ( செவ்வாய்கிழமை), திருச்சி கிழக்கு கோட்டத்தில் வருகிற 19ம் தேதி (வெள்ளிக்கிழமை), மணப்பாறை கோட்டத்தில் வருகிற 23-ம் தேதி ( செவ்வாய்கிழமை) ஆகிய தேவைகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடக்கின்றன. இந்த குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மின்பகிர்மான வட்டம் பெருநகரம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ஆர்.கற்பகச்செல்வி தெரிவித்துள்ளார்.
Comments are closed.