Rock Fort Times
Online News

3000 பேருடன் சமத்துவ பொங்கல் திருச்சியில் மாஸ் காட்டிய அமைச்சர் கே.என்.நேரு

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சமத்துவ பொங்கல் என வண்ணப் பொடிகளால் எழுதிய கோலங்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்கள், என கோலாகலமாக கொண்டாடப்பட்டது,தமிழர்களின் பாரம்பரிய உடையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆகியோர் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

முன்னதாக பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார்..இதனைத் தொடர்ந்து 3000 பேருக்கு வேஷ்டி சேலை, கரும்பு மற்றும் கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மேயர் மு.அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி,மற்றும் மண்டல குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்