Rock Fort Times
Online News

துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்…

பயணியிடம் தீவிர விசாரணை...!

துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது.  அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு  பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில், ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதில் அவர் 1039 கிராம் தங்கத்தை பசை வடிவில் உடலில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றின் இந்திய மதிப்பு ரூ.74.91 லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
அந்த தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்க சொன்னார்கள்? என்பது குறித்து அவரிடம்  தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்