Rock Fort Times
Online News

திருச்சியில் மது அருந்திவிட்டு வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர் “சஸ்பெண்ட்”…

திருச்சியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர் தவச்செல்வனுடன் கடந்த 27ம் தேதி மாலை 5 மணி அளவில் திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் சிந்தாமணி வளாகத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார் .  அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் நஸ்ருதீன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  அவர்,  ரேஷன் பொருட்கள் வாங்க வந்த  சசிகலாவை தரக்குறைவாக பேசி ரேஷன் கார்டை வீசி எரிந்ததாக சொல்லப்படுகிறது.  இதனை அந்த பெண்ணின் கணவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் ரேஷன் கடையில் மது போதையில் பணியாற்றிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், ரேஷன் கடையில்
மது போதையில் பணியாற்றிய  ரேஷன் கடை ஊழியர் நசுருதீனை, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப்பதிவாளர் ராஜகுமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்