பார்சல் சாப்பாட்டிற்கு ஊறுகாய் கொடுக்காத ஹோட்டல் நிர்வாகத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்- நுகர்வோர் கோர்ட் அதிரடி…!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில், 2022ம் ஆண்டு வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் 25 பார்சல் சாப்பாட்டை 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். 11 வகையான உணவுப்பொருட்கள் இருப்பதாகக் கூறி வழங்கப்பட்ட அந்த பார்சல் சாப்பாட்டில், ஊறுகாய் இல்லாததால் ஏமாற்றமடைந்த ஆரோக்கியசாமி, சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் சரிவர பதில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சாப்பாட்டிற்கு ஊறுகாய் வழங்காமல் மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறி சம்பந்தப்பட்ட
ஹோட்டல் நிர்வாகத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஊறுகாய்க்கு உரிய தொகையான 25 ரூபாயும் வழங்க உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் பணத்தை கொடுக்காவிட்டால், மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் அபராதத் தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
Comments are closed.