Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்- பெண் பயணியிடம் விசாரணை…!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்பட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடைமைகளை சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் கட்டுக் கட்டாக 8,000 அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது.  அதன் இந்திய மதிப்பு ரூ.6 லட்சத்து 86 ஆயிரம் ஆகும். உரிய ஆவணங்கள் இன்றி இவற்றை எடுத்து செல்ல முயன்றதாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்