மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். அப்போது ஆண் பயணிகள் இருவர் தங்களது பேன்ட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பைகளில் மறைத்தும், மற்றும் குடும்பத்தினருக்கு கொண்டு வந்திருந்த சானிட்டரி நாப்கின்களுக்குள்ளும் மறைத்து 1,414 கிராம் பசை வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.89.51 லட்சமாகும். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
அதே போல, துபையிலிருந்து கொழும்பு வழியாக நேற்று ( 22.12.2023) திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், தனது பேண்ட்டில் அமைக்கப்பட்ட ரகசிய பைகளில் மற்றும் உள்ளாடைகளில் 494 கிராம் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 3 ஐஃபோன்கள், 3 மடிக்கணினிகள், 10 கடிகார டயல்களும் பறிமுதல் செய்யப் பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.31.09 லட்சம். இது குறித்து சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இரு தினங்களில் மொத்தம் ரூ 1.20 கோடிமதிப்பிலான தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.