Rock Fort Times
Online News

வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 99 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்கவேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இந்நிலையில், வரும் 27-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் தனி இணை ஆணையர் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் மேலாண் இயக்குநர்களுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் அனுப்பிய கடிதத்தில், போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக வரும் 27ம் தேதி மாலை4 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் தனிஇணை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைநிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். பொது அமைதி காத்து சுமுக முடிவை எதிர்நோக்குமாறு இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கியவர் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்- விஜயை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 of 900

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்