கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கம்…
தெற்கு ரயில்வே அறிவிப்பு...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, டிச.25ம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோழிக்கோடுக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரெயில், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
அதேபோல நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும். நாகர்கோவில் இருந்து டிச.25ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 12.15க்கு சென்னையை வந்தடையும். இந்த சிறப்பு ரெயில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.