Rock Fort Times
Online News

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கடையை சூறையாடிய பெண்கள்- வியாபாரி தலை தெறிக்க ஓட்டம்…!

தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக நான்கு இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனை தடுக்க கோரி  கிராம மக்கள் பலமுறை காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும் இது குறித்து காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்த நான்கு சட்டவிரோத மதுக் கடைகளை இன்று (27.04.2026) அடித்து நொறுக்கினர். குறிப்பாக கோவிந்தன் என்பவர் அதிக அளவு மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். அவரால் பலகுடும்பங்கள் சீரழிவதாகக் கூறி அவரது கடையை இன்று சுற்றி வளைத்த பெண்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது கோவிந்தன் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை பெண்கள் சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். அப்போது சுதாரித்துக் கொண்ட அவர், அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கடையைப் பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்